/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறுந்து தொங்கும் மின் கம்பி :மின்வாரியம் சீரமைக்குமா?
/
அறுந்து தொங்கும் மின் கம்பி :மின்வாரியம் சீரமைக்குமா?
அறுந்து தொங்கும் மின் கம்பி :மின்வாரியம் சீரமைக்குமா?
அறுந்து தொங்கும் மின் கம்பி :மின்வாரியம் சீரமைக்குமா?
ADDED : பிப் 04, 2024 08:23 PM

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, அண்ணா நகரில் உள்ள மின்கம்பத்தில் கம்பி அறுந்து தாழ்வாக தொங்குவதால், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது.
கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட, அண்ணா நகர் - கம்பன் வீதி செல்லும் ரோட்டில், பொதுமக்கள், கல்லுாரி மாணவர்கள் நடந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில், பைக்கில் அதிகமானோர் பயணிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகள் அருகே உள்ள மின் கம்பத்தில் கம்பி அறுந்து கீழே தொங்கியபடி உள்ளது.
இந்த மின் கம்பி, கழிவு நீர் செல்லும் கால்வாயின் அருகாமையில் இருப்பதால், பேரூராட்சி பணியாளர்கள் இந்த இடத்தை சுத்தம் செய்ய அச்சப்படுகின்றனர்.
மேலும், மின் கம்பி அறுந்து கிடக்கும் இடத்தில் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. மின் கம்பியில் செடிகள் படர்ந்துள்ளது. மின் கம்பியை சீரமைக்க மின்வாரியமும், கால்வாயை சுத்தப்படுத்த பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

