/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கணவருக்கு கடன் இருந்தால் ஜீவனாம்சம் மறுக்க முடியுமா?
/
கணவருக்கு கடன் இருந்தால் ஜீவனாம்சம் மறுக்க முடியுமா?
கணவருக்கு கடன் இருந்தால் ஜீவனாம்சம் மறுக்க முடியுமா?
கணவருக்கு கடன் இருந்தால் ஜீவனாம்சம் மறுக்க முடியுமா?
ADDED : டிச 21, 2025 05:26 AM

கணவரின் சம்பளத்திலிருந்து, அவரது இன்சூரன்ஸ் பிரீமியம் கடனுக்கான தவணை தொகை பிடித்தம் செய்யப்படுவதால், மனைவிக்கு ஜீவனாம்சம் தர இயலாது என்று, கணவர் மறுக்க முடியுமா?
கணவரின் கடன் மற்றும் இன்சூரன்ஸ் பிரீமியத்தை காரணம் காட்டி, மனைவிக்கு அளிக்க வேண்டிய ஜீவனாம்சத்தை கொடுக்காமல் தவிர்க்க முடியாது என்று, கேரள நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கூட்டு நிறுவனம் ஒன்றின் பங்குதாரரர்கள் சேர்ந்து சொத்து வாங்கிய பிறகு, பங்குதாரரில் ஒருவர் இறந்து விட்டால், அவரது வாரிசுதாரர், பங்குதாரராக இருந்த நிறுவனத்திலிருந்து சொத்தை கேட்க முடியுமா?
சொத்தை கேட்க முடியாது. ஏனென்றால், பங்குதாரர் சட்டப்பிரிவு 14 ன் கீழ், அந்த நிறுவனத்தின் பெயரில் வாங்கும் அனைத்து சொத்துக்களும், அந்த பார்ட்னர்ஷிப் நிறுவனத்துக்கு மட்டுமே உரியது. தனி நபர் கோர இயலாது.
- வக்கீல் சண்முகம்: ரேஸ்கோர்ஸ்.:

