/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாஜ்பாய் பிறந்த நாள் விழா பா.ஜ.வினர் ரத்த தானம்
/
வாஜ்பாய் பிறந்த நாள் விழா பா.ஜ.வினர் ரத்த தானம்
ADDED : டிச 26, 2025 06:39 AM

பொள்ளாச்சியில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தாள் விழாவையொட்டி பா.ஜ.வினர் ரத்ததானம் வழங்கினர்.
பொள்ளாச்சி நகர பா.ஜ. ஊடக பிரிவு சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 101வது பிறந்த நாளை முன்னிட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது. சமூக ஊடகப்பிரிவு நகர தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் துரை, நகர தலைவர் கோகுல்குமார், இளைஞரணி தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர பொதுச் செயலாளர்கள் வாசுதேவன், பிரித்விராஜன், நகர பொருளாளர் திருஞானசம்பந்தம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.
* நெகமம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பா.ஜ., பொள்ளாச்சி வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றிய தலைவர் சத்யசுதா, அ.தி.மு.க., பொள்ளாச்சி வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
*உடுமலை எஸ்.வி., புரம் பஸ் ஸ்டாப் அருகில், உடுமலை மத்திய ஒன்றிய பா.ஜ., சார்பில், ஒன்றிய தலைவர் லோகேஷ்குமார் தலைமையில், வாஜ்பாய் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அவரது உருவப்படத்துக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் நித்தியானந்தம், பாப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
-- நிருபர் குழு -:

