/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பவர் லிப்டிங்' போட்டியில் பாரதியார் பல்கலைக்கு வெண்கலம்
/
'பவர் லிப்டிங்' போட்டியில் பாரதியார் பல்கலைக்கு வெண்கலம்
'பவர் லிப்டிங்' போட்டியில் பாரதியார் பல்கலைக்கு வெண்கலம்
'பவர் லிப்டிங்' போட்டியில் பாரதியார் பல்கலைக்கு வெண்கலம்
ADDED : ஏப் 09, 2025 10:37 PM

கோவை; பல்கலைகளுக்கு இடையேயான, 'பவர் லிப்டிங்' போட்டியில் பாரதியார் பல்கலை அணி வீரர் வெண்கலம் வென்று, பெருமை சேர்த்துள்ளார்.
அனைத்திந்திய பல்கலைகளுக்கு இடையேயான, 'பவர் லிப்டிங் சாம்பியன்ஷிப்' போட்டி, ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் நடந்தது. கடந்த, 4 முதல் 7ம் தேதி வரை நடந்த இப்போட்டியில், பாரதியார் பல்கலை சார்பில் ஏழு வீரர்கள் பங்கேற்றனர். போட்டியானது, 59, 66, 74, 83, 93, 105, 120 மற்றும், 120 கிலோவுக்கும் அதிகமான எடைப்பிரிவுகளில் நடந்தது.
இதில், பாரதியார் பல்கலை அணி சார்பில் பங்கேற்ற, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியின் எம்.காம்.,(சி.எஸ்.,) முதலாமாண்டு மாணவர் தர்ஷன், 66 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.
இதே எடைப்பிரிவில், சென்னை பல்கலை மாணவர் ஜீவானந்தம் வெள்ளி பதக்கம் என, இரு வீரர்களும் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர்.