/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் பல்கலை ஆணழகன் போட்டி வி.எல்.பி. 'சாம்பியன் ஆப் சாம்பியன்'
/
பாரதியார் பல்கலை ஆணழகன் போட்டி வி.எல்.பி. 'சாம்பியன் ஆப் சாம்பியன்'
பாரதியார் பல்கலை ஆணழகன் போட்டி வி.எல்.பி. 'சாம்பியன் ஆப் சாம்பியன்'
பாரதியார் பல்கலை ஆணழகன் போட்டி வி.எல்.பி. 'சாம்பியன் ஆப் சாம்பியன்'
ADDED : டிச 19, 2025 05:56 AM

கோவை, டிச. 19-
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கான ஆணழகன் போட்டி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 27 கல்லுாரிகளில் இருந்து, 58 பேர் பங்கேற்றனர்.
பிறந்த வருடத்தின் அடிப்படையில் 8 பிரிவுகளில் போட்டி நடந்தது.
மாணவர்கள் கட்டுமஸ்தான உடல் அசைவுகளை செய்து காண்பித்து பார்வையாளர்களை கவர்ந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்கள் என எட்டு பேர் பல்கலை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 'சாம்பியன் ஆப் சாம்பியன்' மிஸ்டர் பாரதியார் பட்டத்தை வி.எல்.பி. ஜானகியம்மாள் கல்லுாரி மாணவர் கார்த்திகேயன் தட்டிசென்றார்.
ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை, 45 புள்ளிகளுடன் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியும், இரண்டாம் இடத்தை, 38 புள்ளிகளுடன் வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரியும், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மற்றும் நேரு கலை அறிவியல் கல்லுாரி ஆகியன தலா, 28 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் வென்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் பல்கலை உடற்கல்வி துறை இயக்குனர் அண்ணாதுரை, இந்துஸ்தான் கல்லுாரி முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

