/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேக் கன்ட்ரோல் நிறுவனத்துக்கு தரப்பரிசோதனை அங்கீகாரம்
/
மேக் கன்ட்ரோல் நிறுவனத்துக்கு தரப்பரிசோதனை அங்கீகாரம்
மேக் கன்ட்ரோல் நிறுவனத்துக்கு தரப்பரிசோதனை அங்கீகாரம்
மேக் கன்ட்ரோல் நிறுவனத்துக்கு தரப்பரிசோதனை அங்கீகாரம்
ADDED : அக் 01, 2024 11:28 PM

கோவை : கோவை மேக் கன்ட்ரோல் நிறுவனத்திற்கு, ராணுவ தளவாட பொருள் தர பரிசோதனை அங்கீகாரச் சான்று வழங்கும் விழா, நேற்று நடந்தது. விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவன இயக்குனரகத்தின் தலைவர் சஞ்சய் சாவ்லா சான்றிதழை வழங்கினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், இந்த அங்கீகாரத்தின் அடிப்படையில், விமான தரக்கட்டுப்பாட்டு இயக்குனரகம் (டி.ஜி.ஏ.க்யு.ஏ.) சான்றுகளை அளிக்கும். விமான படைக்கும் பாகங்களை பரிசோதனை செய்ய, இந்நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
மேக் கன்ட்ரோல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சரவணன் கூறுகையில், சர்வதேச தரத்தை பின்பற்ற அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். பரிசோதனைக்கான அனுபவமிக்க பொறியாளர்கள், கருவிகள் இங்குள்ளன,'' என்றார்.
நிகழ்ச்சியில், விமான தரக்கட்டுப்பாட்டு நிறுவன இயக்குனரக இயக்குனர் மகேஷ் கல்சாட், மாக் கன்ட்ரோல் துணைத்தலைவர் தில்லை செந்தில் பிரபு, துணை பொது மேலாளர் ஸ்ரீதர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

