ADDED : ஆக 10, 2025 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி : தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணூல் மாற்றும் விழா, வடவள்ளி தாம்ப்ராஸ் ஹாலில் நேற்று நடந்தது.
புரோகிதர்கள் கணபதி வாத்தியார், ராம்குமார் வாத்தியார் ஆகியோர், பூணூல் மாற்றுவதற்கான யாகங்களை நடத்தினர். உலக நலன், சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்காக பிரார்த்தனை செய்து, பூணூல் மாற்றப்பட்டது.
* மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் பூணூல் அணியும் விழா, சிவ சண்முகசுந்தர பாபு சுவாமி தலைமையில் நடந்தது.
இதனையொட்டி நேற்று காலை, கணபதி ஹோமம், விஸ்வகர்மா காயத்ரிதேவி நவகிரக ஹோமங்கள் நடத்தி, பங்கேற்றவர்களுக்கு சுவாமி பூணூல் அணிவித்தார். ஏற்பாடுகளை பீடத்தின் இளைய பட்டம் பாலரிஷி நாக விக்னேஷ் சுவாமி, தங்கதுரை செய்திருந்தனர்.

