/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பு; தகவல் தெரிவிக்க மொபைல் எண்கள்
/
அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பு; தகவல் தெரிவிக்க மொபைல் எண்கள்
அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பு; தகவல் தெரிவிக்க மொபைல் எண்கள்
அத்திக்கடவு திட்ட குழாய் உடைப்பு; தகவல் தெரிவிக்க மொபைல் எண்கள்
ADDED : ஆக 27, 2025 10:39 PM
அன்னுார்; அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் குழாய் உடைப்பு ஏற்பட்டால், தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் செயல்பட துவங்கியது. இத்திட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படுகிறது. இதில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல இடங்களில் அடிக்கடி குழாய் உடைப்பு மற்றும் வால்வுகளில் பழுது ஏற்படுகிறது.
இதுகுறித்து புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஐந்தாவது நீரேற்று நிலையம் துவங்கி ஆறாவது நீரேற்று நிலையம் வரை உடைப்பு அல்லது பழுது ஏற்பட்டால் 89258 52927 என்கிற மொபைல் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். ஆறாவது நீரேற்று நிலையம் துவங்கி கடைமடை வரை குழாய் உடைப்பு அல்லது பழுது ஏற்பட்டால் 89258 52928 எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
'குழாய் உடைப்பு குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம்,' என அத்திக்கடவு அவிநாசி திட்ட போராட்ட குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

