/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'செயற்கை நுண்ணறிவு அனைவரும் அறியணும்'
/
'செயற்கை நுண்ணறிவு அனைவரும் அறியணும்'
ADDED : மார் 20, 2024 10:17 PM

கோவை : குனியமுத்துர் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில், சர்வதேச அளவிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இதில், கலிபோர்னியாவின் நாசா -ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்தின், மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேஸ்வரன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், ''விண்வெளி, ஆரோக்கியம் வளர்ந்து வரும் துறை, செயற்கை நுண்ணறிவு, பல துறைகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் பற்றி, அனைத்து துறைகளும் தெரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவை,'' என்றார்.
இக்கருத்தரங்கில், பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆளுமைகள் உரையாற்றினர். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா, சி.இ.ஓ., சுந்தரராமன், முதல்வர் ஜெகஜீவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பல்வேறு பேராசிரியர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுனர்களின் சுமார் 100 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

