/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா வழக்கில் கைது ஐந்தாண்டு கடுங்காவல்
/
கஞ்சா வழக்கில் கைது ஐந்தாண்டு கடுங்காவல்
ADDED : டிச 31, 2025 05:10 AM

கோவை: கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நபருக்கு, ஐந்தாண்டு கடுங்காவல் சிறை தண்டனையுடன், ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
காந்திபுரம், அலமுநகர் பகுதியில், 2020 நவ., 4ம் தேதி, கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், காட்டூர் போலீஸ் உதவி ஆய்வாளர் முத்து, ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது சந்தேகிக்கும் படியாக, அங்கு சுற்றி கொண்டிருந்த காந்திகண்ணன் என்ற கண்ணப்பன், 45, என்பவரை விசாரித்த போது, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை இரவுச்சேரி பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவரிடம் இருந்த பையில், 1.3 கி.கி. கஞ்சா இருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை இன்றியமையா பொருட்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட காந்திகண்ணன் என்ற கண்ணப்பனுக்கு, 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும், தவறினால் ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவக்குமார் ஆஜரானார்.

