/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநில அளவிலான போட்டி அணி மேலாளர்கள் நியமனம்
/
மாநில அளவிலான போட்டி அணி மேலாளர்கள் நியமனம்
ADDED : டிச 31, 2025 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை வருவாய் மாவட்ட அளவில் குத்துச்சண்டை, சிலம்பம், டென்னிகாய்ட் ஆகிய விளையாட்டு போட்டிகள் புதிதாக நடத்தப்பட்டன.
வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாநில அளவிலான போட்டிகள் தேனி மாவட்டத்தில் ஜன., 4 முதல், 7ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பவர்களின் வருகை பதிவு, தவறாது இருக்க வேண்டும். மாணவியரை வழிநடத்தும் பொருட்டு ஆறு உடற்கல்வி ஆசிரியைகளும், மாணவர்களை வழிநடத்தும் விதமாக ஐந்து உடற்கல்வி ஆசிரியர்களும் அணி மேலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக, உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.

