sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அசத்திய குஜான் ஆருத்ரா அபார்ட்மென்ட் வாசகியர்!

/

 அசத்திய குஜான் ஆருத்ரா அபார்ட்மென்ட் வாசகியர்!

 அசத்திய குஜான் ஆருத்ரா அபார்ட்மென்ட் வாசகியர்!

 அசத்திய குஜான் ஆருத்ரா அபார்ட்மென்ட் வாசகியர்!


UPDATED : டிச 29, 2025 03:42 PM

ADDED : டிச 29, 2025 05:50 AM

Google News

UPDATED : டிச 29, 2025 03:42 PM ADDED : டிச 29, 2025 05:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தினமலர் நாளிதழ் சார்பில், 'மார்கழி விழாக்கோலம்' கோலப்போட்டி நடந்து வருகிறது. அபார்ட்மென்ட்களில் குடியிருக்கும் நம் வாசகியர், அழகாக கோலமிட்டு பரிசுகளை வென்று வருகின்றனர்.

செல்வபுரம் தெலுங்கு பாளையம் பிரிவில் உள்ள, குஜான் ஆருத்ரா அபார்ட்மென்ட்டில், நேற்று நடந்த கோலப்போட்டியில், 17 மகளிர் பங்கேற்று, புள்ளிக்கோலம் மற்றும் ரங்கோலி கோலங்களை வரைந்து பரிசுகளை வென்றனர்.

இதில் முதல் பரிசு தேஜூ, இரண்டாம் பரிசு பிரியங்கா, மூன்றாம் பரிசு ரத்தின பிரபா ஆகியோர் வென்றனர். சிறப்பு பரிசு தேவ் விநாயக், உஷாராணி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



வாசகி சித்ரா வெங்கடேசன் கூறுகையில், ''தினமலர் கோலப்போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. அது இப்போது நிறைவேற்றி உள்ளது. ரங்கோலிதான் எனக்கு பிடிக்கும். வீட்டில் புள்ளி கோலம் போட்டாலும், அதிலும் கலர் மிக்ஸ் பண்ணி போடுவேன். காலங்கள் மாறினாலும், கோலம் போடும் பண்பாடு நம் பெண்களிடம் மாறாது,'' என்றார்.

Image 1514747

அபார்ட்மென்ட் அசோசியேஷன் தலைவர் வாசுதேவன் கூறுகையில், ''நான் 40 ஆண்டுகளாக தினமலர் வாசகன். தினமலர் கோலப்போட்டியில் பங்கேற்க, எங்கள் அபார்ட்மென்டில் உள்ள பெண்கள் ஆர்வமாக இருந்தனர். வாசலில் கோலம் போடுவது, நம் பண்பாட்டின் ஓர் அங்கம். இந்த போட்டியின் வழியாக, இளைய தலைமுறை பெண்கள் மத்தியில் இந்த கலாசாரம் வளரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Image 1514746

அசோசியேஷன் செயலாளர் பாலமூர்த்தி குப்தா கூறுகையில், ''கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்தாலும், நம் பண்பாடு, கலாசாரத்தை மறக்கக் கூடாது என்பதை, தினமலர் கோலப்போட்டி பெண்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக உள்ளது. எங்கள் அபார்ட்மென்ட்வாசிகள் எல்லோருக்கும் இதில் சந்தோஷம்'' என்றார்.

Image 1514748

'ஆண்டாள் அலங்காரம் பிடிக்கும்'

ஆண்டாள் கிளிக்கோலம் வரைந்து அசத்தி இருந்த வாசகி சுமதி கூறுகையில், ''எனக்கு ஓவியம் வரைவது பிடிக்கும். ஆண்டாளின் கிளி, கூந்தல் அலங்காரம், சூடிக்கொடுத்த சுடர் கொடி தொடுத்த மாலை, மயிலிறகு ரங்கோலியில் தீட்டியிருக்கிறேன்,'' என்றார்.



Image 1514747

'வன்முறை தடுக்க விழிப்புணர்வு'

'ஸ்டாப் வயலன்ஸ்' என்ற தலைப்பில், விழிப்புணர்வு கோலம் வரைந்து அசத்தியிருந்த வாசகியர் ஸ்வப்னா லீ மற்றும் பிரியங்கா கூறும் போது, ''கோலத்தின் மூலம் பெண்கள் எதிர் கொள்ளும் வன்முறையை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'ஸ்டாப் வயலன்ஸ்' என்ற கருத்தை மையமாக வைத்து இந்த ரங்கோலி கோலத்தை வரைந்து இருக்கிறோம்'' என்றனர்.








      Dinamalar
      Follow us