/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களை டென்ஷனாக்குது சூர்யா நகர் ரயில்வே கேட்; தீர்வு காண அனைத்து கட்சிகள், பொதுமக்கள் கவன ஈர்ப்பு கூட்டம்
/
மக்களை டென்ஷனாக்குது சூர்யா நகர் ரயில்வே கேட்; தீர்வு காண அனைத்து கட்சிகள், பொதுமக்கள் கவன ஈர்ப்பு கூட்டம்
மக்களை டென்ஷனாக்குது சூர்யா நகர் ரயில்வே கேட்; தீர்வு காண அனைத்து கட்சிகள், பொதுமக்கள் கவன ஈர்ப்பு கூட்டம்
மக்களை டென்ஷனாக்குது சூர்யா நகர் ரயில்வே கேட்; தீர்வு காண அனைத்து கட்சிகள், பொதுமக்கள் கவன ஈர்ப்பு கூட்டம்
ADDED : மே 01, 2025 05:38 AM

கோவை : கோவை மாநகராட்சி, 56வது வார்டு, ராமச்சந்திரா நாயுடு தெரு மற்றும் சூர்யா நகருக்கு இடைப்பட்ட பகுதியில், ரயில்வே கடவு எண்: 3 செல்கிறது. இவ்வழித்தடத்தில் நாளொன்றுக்கு சுமார், 52 முறை ரயில்கள் கடந்து செல்கின்றன.
ரயில்கள் செல்லும்போது, கேட் போடுவதால், 15 நிமிடங்கள் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இரு வழித்தடங்களிலும் ரோடுகள் மிகவும் குறுகலாக இருப்பதால், வாகனங்கள் தேங்கும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மேம்பாலமே தீர்வு
இதற்கு தீர்வு காண, ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு, 2011ல் 26.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 8.50 மீட்டர் அகலம், 662 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்டுவது என்றும், பாலத்தின் இருபுறமும் தலா, 3.75 மீட்டர் அகலத்துக்கு சேவை சாலை, 1.50 மீட்டர் அகலத்துக்கு நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது.
இதற்கு பாலத்தின் இருபுறமும், 10 மீட்டர் அகலத்துக்கு நிலம் தேவைப்பட்டது. அப்பகுதியில் உள்ள கட்டடங்களை இடித்து கையகப்படுத்த வேண்டும்.
இதற்கு மாற்று ஏற்பாடாக, சுரங்கப்பாதை அமைக்கலாம் என கூறப்பட்டது. இதன்பின், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள், ரயில்வே கேட்டை கடந்து செல்ல தினமும் அவஸ்தைப்படுகின்றனர். பள்ளி, கல்லுாரி நேரங்களில் மாணவ - மாணவியர் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
அறிவிப்பால் மக்கள் கொந்தளிப்பு
இதற்கு நிரந்தர தீர்வு காணாமல், ரயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும் சமயங்களில், இருகூர் தரைப்பாலம் அல்லது நேதாஜிபுரம் தரைபாலம் வழியாக மாற்று வழித்தடத்தை பயன்படுத்துமாறு, மாநகராட்சியில் இருந்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருக்கிறது. இது, 56வது வார்டு மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அப்பகுதியை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் இணைந்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க, கவன ஈர்ப்பு கூட்டத்தை, சூர்யா நகர் ரயில்வே கேட் அருகே நேற்று நடத்தினர்.
வந்தார் எம்.எல்.ஏ.,ஜெயராம்
சூர்யா நகர், ஸ்ரீகாமாட்சி நகர், சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக, சிங்காநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., ஜெயராம் பங்கேற்றார்.
ரயில்வே கேட் பிரச்னைக்கு தீர்வு காண, மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அதற்கு முன்னதாக, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று வலியுறுத்துவது என்றும், தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவை சந்தித்து, மனு கொடுத்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

