sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிக்கு கூடுதல் நிதி: முதல்வர் அறிவிப்பால் வக்கீல்கள் மகிழ்ச்சி

/

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிக்கு கூடுதல் நிதி: முதல்வர் அறிவிப்பால் வக்கீல்கள் மகிழ்ச்சி

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிக்கு கூடுதல் நிதி: முதல்வர் அறிவிப்பால் வக்கீல்கள் மகிழ்ச்சி

ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டுமான பணிக்கு கூடுதல் நிதி: முதல்வர் அறிவிப்பால் வக்கீல்கள் மகிழ்ச்சி


ADDED : மார் 15, 2024 10:41 PM

Google News

ADDED : மார் 15, 2024 10:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுமானப்பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு வக்கீல்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பொள்ளாச்சியில் கோர்ட்கள் அனைத்தும், ஒரே வளாகத்தில் செயல்படும் வகையில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, கடந்த 2016ல், கோவை ரோடு, அண்ணா நகர் மேடு பகுதியில், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்க, நகராட்சிக்கு சொந்தமான நிலம், 3.25 ஏக்கரை ஒப்படைத்தது.

கோர்ட் வளாகம் அமையும் இடத்தை, மாவட்ட நீதிபதி பார்வையிட்டு, நில அளவுகளை இறுதி செய்து ஐகோர்ட் நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார். அதன்பின், கோர்ட் வளாக அமைப்பு திட்டமிடலில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி கட்ட வரைபடத்தில், 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது.

அதே வளாகத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றமும் அமைக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. மொத்தம், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.

இப்பணிகளை தொடர்ந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தும் வகையில் கூடுதலாக, 15 கோடி ரூபாய் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக நிதி கேட்டு பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கம் சார்பில், தமிழ அரசு மற்றும் முதன்மை செயலருக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டது. பொள்ளாச்சிக்கு தமிழக முதல்வர் வந்த போதும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழக முதல்வர், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்துக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு ஏதுவாக, 14.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்.

பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க தலைவர் துரை கூறியதாவது: பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்துக்கு, கூடுதல் நிதி கேட்டு, அமைச்சர் முத்துசாமியிடம் மனு கொடுத்தோம். அமைச்சர் வாயிலாக தமிழக முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டது.

தற்போது, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொய்வடைந்த பணிகள் முழு அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். முதல்வர் மற்றும்அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us