/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க அறிவுரை
/
வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க அறிவுரை
ADDED : செப் 24, 2024 11:54 PM
அன்னுார் : வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், 15 வது நிதி குழு மானியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களில் பல கோடி ரூபாயில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இது குறித்த ஆய்வு கூட்டம் நேற்று அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரவீந்திரன் பேசுகையில், ''கனவு இல்லம் வீடு கட்டும் திட்டத்தில் பணிகளை விரைந்து முடிக்க பயனாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
தினமும் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் தினசரி பணிகளை பார்வையிட வேண்டும். முன்னேற்ற அறிக்கை குறித்து தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். பணிகளில் இடையூறு ஏற்பட்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டும். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், மயான மேம்பாட்டு பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
சுற்றுச்சுவர், தண்ணீர் வசதி, தரைத்தளம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மயானத்துக்கு செல்லும் பாதை சரியாக உள்ளதா என்று பார்த்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். கூட்டத்தில், ஒன்றிய பொறியாளர்கள் தங்கமணி, சந்திர கலா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக மேலாளர் மற்றும் ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.

