/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்கணும்!
/
பள்ளி மாணவர்களுக்காக கூடுதல் பஸ் இயக்கணும்!
ADDED : பிப் 27, 2024 11:35 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டியில், காங்., தலைவர் அறிமுக கூட்டம் நடந்தது.
பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி காங்., கட்சி தலைவராக வீராசாமி நியமிக்கப்பட்டார். அவரது அறிமுக கூட்டத்துக்கு, தெற்கு மாவட்ட தலைவர் தென்னரசு, வட்டார தலைவர்கள் செல்வக்குமார், அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் காங்., முன்னாள் தலைவர் ராமகிருஷ்ணன், மனித உரிமை துறை பொள்ளாச்சி நகர தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பஸ் பயணிகளுக்கு தங்கம் தியேட்டர், காந்திபுரம் பஸ் ஸ்டாப்புகளில் நிழற்கூரை அமைக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

