தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஒருவழியாக மேம்பால பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு

 ஒருவழியாக மேம்பால பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு

 ஒருவழியாக மேம்பால பிரச்னைக்கு கிடைத்தது தீர்வு


ADDED : நவ 30, 2025 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலத்தில் சர்வீஸ் ரோட்டில் வரும் வாகனங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் நிலத்தை கையகப்படுத்தும் பணியும், ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணியையும், தேசிய நெடுஞ்சாலை துறை துவக்கியது.

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் வண்ணான் கோவில் சந்திப்பு வரை, 1.85 கி.மீ., நீளத்துக்கு, 115 கோடி ரூபாய் செலவில் தேசிய நெடுஞ்சாலை துறையால் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. பாலம் கடந்த, 2023 டிச., மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இப்பாலத்தில் மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் பாதையில் இறங்குதளமும், சர்வீஸ் ரோடும் ஜீரோ பாயிண்ட்டில் இணையும் இடத்தில் உள்ள, 4 கடைகள் செயல் படுகின்ற நிலத்தை கையகப்படுத்தாமல் மேம்பாலம் அமைத்திருப்பதால், வாகனங்களில் வருவோர் விபத்துகளை சந்திக்கும் நிலை உருவானது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, 7.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், பணிகள் துவங்கவில்லை. கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

கடிதம் தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் பாதையில் இறங்குதளமும், சர்வீஸ் ரோடும் ஜீரோ பாயின்ட்டில் இணையும் இடத்தில் உள்ள கடைகளை, கையகப்படுத்தும் பணி துவங்கியது. கையகப்படுத்தும் பணியும், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் நடந்து வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த இப்பிரச்னைக்கு, தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது.

'தார்சாலை அமைக்கும்பணி உடனே துவங்கும்'

தேசிய நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர் சிவகாமி கூறுகையில், ''பாலத்தின் இறங்கு தளத்தில் இருந்து, 25.8 மீ., அகலத்தில், 380 மீட்டர் நீளத்தில், அமுதா ஸ்டோர் வரை ரோட்டின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நில உரிமையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டு தொகை, அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விட்டது. கையகப்படுத்தும் பணி முடிந்ததும், உடனடியாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us