/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளியில் எளிய அறிவியல் பரிசோதனை
/
பள்ளியில் எளிய அறிவியல் பரிசோதனை
ADDED : பிப் 08, 2024 10:08 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எளிய அறிவியல் பரிசோதனை செய்து காண்பிக்கப்பட்டது.
பொள்ளாச்சி, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வானவில் மன்றம் சார்பில், எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காண்பிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பொள்ளாச்சி வானவில் மன்றம் ஒருங்கிணைப்பாளர் சங்கீதா, சோதனைகளை செய்து காட்டி மாணவர்களிடம் கலந்துரையாடினார். நடக்கும் நீர், வெப்ப உமிழ் வினை, வெப்ப கொள்வினை, எலும்பு மண்டலம், பட்டாசு தயாரிக்கும் முறை, விரவுதல், திண்மம், திரவம், வாயு பண்புகள் சோதனைகள் செய்து காட்டினார்.
மாணவர்கள் முன் சோதனைகள் செய்து கருவிகளை கையாளுதல், வேதியியல் நிகழ்வுகள் வாழ்வில் நடைபெறுதலை சுவாரசியமாக செய்து காட்டினார்.
கை எலும்புகள் வேலை செய்யும் விதத்தையும், பட்டாசு தயாரித்தல், சட்டையில் நீலம் கலத்தல், மாதிரி செய்து காண்பித்தார்.அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் பொருட்டு அன்றாட வாழ்வில் மேற்கண்ட அறிவியல் கருத்துகள் எங்கெல்லாம் பயன்படுகின்றன என அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா விளக்கினார்.
வேர் தண்டு நீர் உறிஞ்சுதல், சுண்ணாம்பு வெப்ப உமிழ் வினை, குளுக்கோஸ் நீரில் கரைதல், வெப்ப கொள் வினை எனவும், ஊதுபத்தி வாசனை திரவியம் காற்றில் கலத்தல், சமைக்கும் போது நறுமணம் காற்றில் கலத்தல் என, அன்றாட வாழ்க்கையோடு இணைந்து கற்பிக்கப்ட்டது.
உடலிலுள்ள மிகப்பெரிய எலும்பு, மிகச்சிறிய எலும்புகள் அவற்றின் பணிகள் பற்றி மாதிரியோடு விளக்கப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்கள் பங்கேற்றனர்.

