/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு ரோடுகள் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கணும்
/
நான்கு ரோடுகள் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கணும்
ADDED : ஏப் 06, 2025 09:58 PM

வால்பாறை; வால்பாறை, ஸ்டேன்மோர் சந்திப்பில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில், ரவுண்டானா அமைக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை நகரில், சுற்றுலா பயணியர் வருகையால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, ஸ்டேன்மோர் சந்திப்பில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துக்களும் நடக்கிறது.
இதனை தடுக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஸ்டேன்மோர் சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.
பொதுமக்கள் கூறியதாவது:
சுற்றுலா பயணியர் வருகையால், வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த பகுதியில் அரசு துவக்கப்பள்ளி, கல்லுாரி, பகுதி நேர வட்டார போக்குவரத்து அலுவலகம், தொழிலாளர் நல ஆய்வாளர் அலுவலகம், ரேஷன் கடை உள்ளிட்டவை இருப்பதால், மக்கள் போக்குவரத்தும் அதிகம் உள்ளது.
நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில், அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

