/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பறக்கும் படை சோதனை துவங்கியாச்சு கைவசம் இருக்கணும் ஆவணம்! விதிமீறி பணம் பறிமுதல் செய்வதாக புகார்
/
பறக்கும் படை சோதனை துவங்கியாச்சு கைவசம் இருக்கணும் ஆவணம்! விதிமீறி பணம் பறிமுதல் செய்வதாக புகார்
பறக்கும் படை சோதனை துவங்கியாச்சு கைவசம் இருக்கணும் ஆவணம்! விதிமீறி பணம் பறிமுதல் செய்வதாக புகார்
பறக்கும் படை சோதனை துவங்கியாச்சு கைவசம் இருக்கணும் ஆவணம்! விதிமீறி பணம் பறிமுதல் செய்வதாக புகார்
ADDED : மார் 17, 2026 06:27 AM

மேட்டுப்பாளையம், அவிநாசி, சூலுார் உட்பட பகுதிகளில், பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டசபை தேர்தல் அறிவிப்பால், நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பணம் கொண்டு செல்லும் போது அதற்குரிய ஆவணம் இருக்க வேண்டும் என்பன உட்பட பல விதிமுறைகள் உள்ளன.
அவிநாசி தொகுதியில் மூன்று பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. பறக்கும் படை அலுவலர் சுஜாதா தலைமையிலான குழுவினர், நேற்று அன்னுாரில் அவிநாசி சாலையில், சோமனூர் பிரிவில் ஆய்வு செய்தனர். காரில், பெரியபுத்துார் சந்திரசேகர் என்பவர் கொண்டு வந்த ரூ.14 லட்சம் பறிமுதல் செய்து, சிறப்பு போலீஸ் எஸ்.ஐ., பத்மாவதி மற்றும் அதிகாரிகள், அவிநாசி தாலுகா அலுவலகத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராஜிடம் ஒப்படைத்தனர்.
பணம், அவிநாசி கருவூலத்தில் செலுத்தப்பட்டது. 'உரிய ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டு, வருமான வரித் துறையினரும் விசாரணை நடத்திய பின்பே பணம் திருப்பி தரப்படும்' என, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராஜ் தெரிவித்தார்.
சந்திரசேகர் கூறுகையில், ''வங்கியில் நகை அடமானத்துக்கு வைத்து கடன் பெற்றிருந்தேன். வேறிடத்தில் பெற்ற பணத்தை வங்கியில் செலுத்தி நகையை மீட்பதற்காக வங்கிக்கு சென்று கொண்டிருந்தேன். நகை அடமானம் வைத்ததற்கான ஆவணம், பணம் வைத்திருந்த தனியார் வங்கியின் லாக்கரில் இருந்து எடுத்ததற்கான ரசீது என அனைத்து ஆவணங்களும் இருந்தன. எனினும் அதிகாரிகள் இதை ஏற்க மறுத்து, பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். பல்வேறு நடைமுறைகளுக்குப் பின், பணத்தை பெற, பல வாரங்களாகும் என்பதால், சிரமத்திற்கு உள்ளாகியுள்ளேன்,'' என்றார்.
* மேட்டுப்பாளையத்தில் தொகுதியில், 9 பறக்கும் படைகள் குழுக்கள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று, கூடலுார் கவுண்டம்பாளையம் பகுதியில், பறக்கும் படையினர் சோதனையின் போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த செல்வன் என்பவரிடம், உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.4.27 லட்சம் பறிமுதல் செய்த அதிகாரிகள், தொகுதி தேர்தல் அதிகாரி விஸ்வநாதன் முன்னிலையில், மேட்டுப்பாளையம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.-----
* சூலுார் சட்டசபை தொகுதியில், 9 பறக்கும் படைகள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் பணிகளில் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன் தினம் இரவு முதலே பறக்கும் படையினர், முழு வீச்சில் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று மோப்பிரிபாளையத்தில் வாகன சோதனை நடத்தினர். கோவில்பாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி 65, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, ரூ.66 ஆயிரம் பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதனிடம் ஒப்படைத்தனர்.
----நிருபர் குழு-

