/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேராசிரியர்களுக்கான விளையாட்டு; அவிநாசிலிங்கம் பல்கலை முதலிடம்
/
பேராசிரியர்களுக்கான விளையாட்டு; அவிநாசிலிங்கம் பல்கலை முதலிடம்
பேராசிரியர்களுக்கான விளையாட்டு; அவிநாசிலிங்கம் பல்கலை முதலிடம்
பேராசிரியர்களுக்கான விளையாட்டு; அவிநாசிலிங்கம் பல்கலை முதலிடம்
ADDED : பிப் 05, 2024 01:13 AM

கோவை:கிருஷ்ணா கல்லுாரியில் நடந்த, பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகளில், அவிநாசிலிங்கம் பல்கலை அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை சார்பில், கல்லுாரி பேராசிரியர்களுக்கு மாநில அளவிலான ஸ்போர்ட்ஸ் அண்ட் கேம்ஸ் போட்டிகள், கல்லுாரி வளாகத்தில் நடந்தன.
பேராசிரியர்களுக்கு கிரிக்கெட், இறகுப்பந்து, வாலிபால், கேரம், த்ரோபால், டென்னிகாய்ட், தடகளம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. சுமார் 25 கல்லுாரிகளை சேர்ந்த, 180க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு, அதிக வெற்றிகளை பெற்ற அவிநாசிலிங்கம் பல்கலை அணி, 64 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.
இரண்டாம் இடத்தை 45 புள்ளிகளுடன் ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரி அணியும், மூன்றாமிடத்தை 30 புள்ளிகளுடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லுாரி அணியும் பிடித்தன.
வெற்றி பெற்றவர்களுக்கு, கோப்பை மற்றும் பதக்கங்களை, கிருஷ்ணா கல்லுாரி முதல்வர் ஜெகஜீவன் வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் குமரேசன் செய்திருந்தார்.

