/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் தருவதாக 7.65 லட்சம் ரூபாய் மோசடி
/
ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் தருவதாக 7.65 லட்சம் ரூபாய் மோசடி
ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் தருவதாக 7.65 லட்சம் ரூபாய் மோசடி
ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் தருவதாக 7.65 லட்சம் ரூபாய் மோசடி
ADDED : டிச 16, 2024 11:26 PM
கோவை; ஆன்லைன் டிரேடிங்கில் லாபம் தருவதாக, வாலிபரிடம் ரூ.7.65 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை காமராஜர் ரோடு ரெட் பீல்ட், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுரேஷ் சுந்தர் சிங், 29. இவர் வீட்டில் இருந்தபடியே, நெட்வொர்க் மார்க்கெட்டிங் செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பேஸ்புக்கை பயன்படுத்தும் போது, அதில் வந்த விளம்பரத்தை பார்த்துள்ளார்.
அதில், தங்களது நிறுவனத்துடன் இணைந்து டிரேடிங் செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. சுரேஷ் சுந்தர் சிங் அந்த நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்தார். தொடர்ந்து, தனது ஆதார் எண், வங்கி விவரங்களை பதிவு செய்தார்.
அதன் பின் மொபைல் போனில், அவரை தொடர்பு கொண்ட ஒருவர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்யுமாறு கூறினார். இதையடுத்து, அவர் பல்வேறு தவணைகளாக ரூ.7.65 லட்சத்தை அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
முதலீடு செய்து பல நாட்களாகியும், எந்த லாபமும் கிடைக்கவில்லை. கோவை சைபர் கிரைம் போலீசில் சுரேஷ் சுந்தர் சிங் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

