/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"வதந்தி பரப்புவோருக்கு பாடம் புகட்டும் நேரம் வந்தாச்சு": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
/
"வதந்தி பரப்புவோருக்கு பாடம் புகட்டும் நேரம் வந்தாச்சு": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
"வதந்தி பரப்புவோருக்கு பாடம் புகட்டும் நேரம் வந்தாச்சு": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
"வதந்தி பரப்புவோருக்கு பாடம் புகட்டும் நேரம் வந்தாச்சு": சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
UPDATED : மார் 13, 2024 02:52 PM
ADDED : மார் 13, 2024 11:53 AM

கோவை: 'தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாமல் வதந்தி பரப்புவோருக்கு பாடம் புகட்டும் நேரம் வந்திருக்கிறது' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கோவை, பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் ரூ. 560.05 கோடி செலவில் 273 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, ரூ. 489.53 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர், அவர் பல்வேறு துறைகளின் சார்பில் 57,325 பயனாளிகளுக்கு ரூ. 223.93 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம்
பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சிறப்பான 3 ஆண்டு கால ஆட்சியை வழங்கிய பெருமிதத்துடன் உங்களை சந்திக்கிறேன். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் முகங்களில் காணும் மகிழ்ச்சியை பார்க்கும் போது அனைத்து தேர்தல்களிலும் வெல்வோம். வரும் லோக்சபா தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் எல்லா தேர்தலிலும் வெல்வோம்.
பொருளாதாரம்
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது நம் தமிழை, நம் பண்பாட்டை, நமது கலாசாரத்தை பழிப்பவர்களுக்கு பதில் சொல்லும் காலம் வந்தாச்சு. சிலர் பொய்களை பரப்ப வாட்ஸ்அப் யூனிவர்சிட்டி நடத்துகிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ளாமல் அவதூறு பரப்பி வருகின்றனர். பொய்களை பரப்புவது பா.ஜ.,வுக்கு உயிர் மூச்சு. தமிழகத்தில் அது எடுபடாது.
15 அங்கன்வாடி மையங்கள்
விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னை கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். உக்கடத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும். ஆர்.எஸ்.புரத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும். 15 அங்கன்வாடி மையங்கள், 18 நியாய விலைக் கடைகள் கட்டப்படும். ஈரோடு மாவட்டத்தில் 8 சமுதாய நலக்கூடங்கள் அமைக்கப்படும்.
பா.ஜ., கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?
கோட்டையில் இருந்து மட்டும் திட்டங்களை நிறைவேற்றாமல் மக்களின் மனங்களையும் தெரிந்துகொள்கிறேன். சிந்தித்து செயல்படுவதால் பொருளாதாரம் வளர்கிறது. 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பா.ஜ., கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தமிழக அரசு தடுப்பதாக பிரதமர் மோடி பொய் சொல்கிறார்.
நலத்திட்டங்கள்
அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியல் இட முடியுமா?. கூட்டணியாக இருந்த அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் பிரிந்தது போல் நடக்கிறது. மத்தியில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்திற்கு கூடுதலான நலத்திட்டங்கள் கிடைக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

