/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புளியம்பட்டி தர்ம சாஸ்தா கோயிலில் 18ம் படி திறப்பு
/
புளியம்பட்டி தர்ம சாஸ்தா கோயிலில் 18ம் படி திறப்பு
புளியம்பட்டி தர்ம சாஸ்தா கோயிலில் 18ம் படி திறப்பு
புளியம்பட்டி தர்ம சாஸ்தா கோயிலில் 18ம் படி திறப்பு
ADDED : டிச 18, 2025 05:18 AM
அன்னூர்: புளியம்பட்டியில், பழமையான சித்தி விநாயகர் - ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் உள்ளது. வருகிற 19ம் தேதி மதியம் 3:00 மணிக்கு டானா புதூர், கரி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, ஸ்ரீ தர்மசாஸ்தா உற்சவமூர்த்தி ஊர்வலம் புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக சென்று, சித்தி விநாயகர் ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலை அடைகிறது.
வருகிற, 20ம் தேதி காலை 6:00 மணிக்கு தர்ம சாஸ்தா கோவிலில் கணபதி ஹோமம், ஐயப்ப சுவாமி ஹோமம், ருத்ர பாராயணம், கலசாபிஷேகம், அலங்கார பூஜை நடைபெறுகிறது.
அன்று காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை, கோவிலில் ஆண் பெண் இரு பாலரும் 18ம் படி வழியாக சென்று, ஐயப்பனை வழிபடலாம். இரவு 9:00 மணிக்கு படி பூஜை நடைபெறுகிறது.