/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரவணம்பட்டி சாலையில் 100 கி.மீ., வேகம்! 'பறக்கும்' வாகனங்களுக்கு 'பழுக்கிறது' அபராதம்
/
சரவணம்பட்டி சாலையில் 100 கி.மீ., வேகம்! 'பறக்கும்' வாகனங்களுக்கு 'பழுக்கிறது' அபராதம்
சரவணம்பட்டி சாலையில் 100 கி.மீ., வேகம்! 'பறக்கும்' வாகனங்களுக்கு 'பழுக்கிறது' அபராதம்
சரவணம்பட்டி சாலையில் 100 கி.மீ., வேகம்! 'பறக்கும்' வாகனங்களுக்கு 'பழுக்கிறது' அபராதம்
ADDED : பிப் 14, 2024 01:41 AM
கோவை:கோவை மாநகரில் சரவணம்பட்டி பகுதியில், 100 கி.மீ., வேகத்திற்கு மேல் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இவ்வாறு, அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை கண்டறிந்து, போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
கோவை மாநகரில், 40 கி.மீ., வேகத்தில்தான் வாகனங்கள் இயக்க வேண்டும் என்று, 2019ம் ஆண்டு உத்தரவிடப்பட்டுள்ளது. காந்திபுரம், அவினாசி ரோடு மேம்பாலம், வைசியாள் வீதி, செல்வபுரம் ஆகிய பகுதிகளில், 30 கி.மீ., வேகத்தில் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்கள் மற்றும் அவசர கால வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் இந்த வேக கட்டுப்பாட்டை மீறி, கோவை மாநகரில் பல இடங்களில் வாகனங்கள் அதிவேகத்தில் இயக்கப்படுகின்றன.
அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க, கோவை அவினாசி ரோட்டில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் அருகேயும், கோவை- சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அம்மன் கோவில் அருகிலும், கோவை - பாலக்காடு சாலையிலும் என, 3 இடங்களில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் ஒரே நேரத்தில், 32 வாகனங்களின் வேகத்தை கண்காணித்து, பதிவு செய்யும் வசதி கொண்டவை. இந்த நவீன கேமராக்கள் மூலம் பறக்கும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகரில் நிர்ணயம் செய்யப்பட்ட, 40 கி.மீ., வேகத்தை விட, 15 சதவீத வாகனங்கள், 50 கி.மீ., முதல், 80 கி.மீ., வரை அதிவேகமாக செல்வது தெரியவந்துள்ளது.
கோவை- சத்தி ரோடு சரவணம்பட்டி பகுதியில், தினமும் ஏராளமான வாகனங்கள், 100 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது அதிவேகத்தில் இயக்கப்படும் வாகனங்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு, அபராத தொகை பல மடங்கு அதிகமாக விதிக்கப்படும்.

