/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜூன் மாத கட்டணத்தையே இம்மாதத்துக்கும் செலுத்தலாம்!
/
ஜூன் மாத கட்டணத்தையே இம்மாதத்துக்கும் செலுத்தலாம்!
ஜூன் மாத கட்டணத்தையே இம்மாதத்துக்கும் செலுத்தலாம்!
ஜூன் மாத கட்டணத்தையே இம்மாதத்துக்கும் செலுத்தலாம்!
ADDED : ஆக 16, 2024 12:08 AM
கோவை : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வெள்ளலுார் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட ஒருசில பகுதிகளில், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படாததால், சம்பந்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர், ஜூன் மாத மின் கட்டணத்தையே இம்மாதத்துக்கும் செலுத்தலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குனியமுத்துார், வெள்ளலுார் பிரிவு அலுவலகம், கோணவாய்க்கால்பாளையம் பகுதிக்குட்பட்ட எல்.ஜி.நகர், பேஸ் -2, வெங்கடேஸ்வரா நகர், ஆருத்ரா நகர், கக்கன் நகர், குமரன் நகர் மற்றும் ஜீவா நகரில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால், ஒருசில மின் இணைப்புகளில், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பகுதி மின் நுகர்வோர், ஜூன் மாத மின் கட்டணத்தையே ஆகஸ்ட் மாதத்துக்கும் செலுத்தலாம்.
இத்தகவலை, குனியமுத்துார் செயற்பொறியாளர், சுரேஷ் தெரிவித்துள்ளார்.

