/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பைக் மீது பஸ் மோதல்: தொழிலாளி பலி
/
பைக் மீது பஸ் மோதல்: தொழிலாளி பலி
ADDED : மே 21, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் கல்லார் அருகே புளியமரத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து, 25. கூலி தொழிலாளி. இவர் தனது பைக்கில் கல்லாரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்றார்.
அப்போது, ஊட்டி நோக்கி வந்த அரசு பஸ், பைக் மீது மோதியதில், காளிமுத்து படுகாயமடைந்தார். அவரை, அக்கம், பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

