/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுழற்சி முறையில் ஆசிரியர்களுக்கு பணி
/
சுழற்சி முறையில் ஆசிரியர்களுக்கு பணி
ADDED : ஏப் 22, 2024 11:17 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நாளை துவங்குகிறது. வரும், 26ம் தேதி வரை, ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதேநேரம், தலைமையாசிரியர்கள், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வருகை புரிய உள்ளனர். விடைத்தாள் திருத்தம், வருகைப் பதிவேட்டை சரிசெய்தல், தேர்வு முடிவுகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும் உள்ளனர். இதற்காக, ஆசிரியர்கள், சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்படவும் உள்ளனர்.
இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில், 'மே மாதத்தில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். தற்போது ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல, மாணவர் சேர்க்கையும் நடத்தப்படும். இதனால், ஒரு ஆசிரியர், இரு நாட்கள் வீதம் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்படுவர்,' என்றனர்.

