/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் ;மலையோர கிராமங்களில் முற்றுகை
/
தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் ;மலையோர கிராமங்களில் முற்றுகை
தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் ;மலையோர கிராமங்களில் முற்றுகை
தண்ணீர் தேடி வரும் காட்டு யானைகள் ;மலையோர கிராமங்களில் முற்றுகை
ADDED : ஏப் 29, 2024 12:53 AM

பெ.நா.பாளையம்;வெப்பம் அதிகரித்து வருவதால், வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி மலையோர கிராமங்களை முற்றுகையிடுகின்றன.
வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்க, வனத்துறை சார்பில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் எட்டு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதில், அவ்வப்போது, தண்ணீரை, வனத்துறையினர் நிரப்பி வருகின்றனர்.
தடாகம், வீரபாண்டிபுதுரை அடுத்துள்ள மூலக்காடு பழங்குடியின கிராமத்தில் வசிக்கும் மக்கள், ஊர் எல்லையில் வனவிலங்குகள் மற்றும் பறவைகள் தண்ணீர் அருந்த, தொட்டி கட்டி, அதில் தினமும் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கத்தால், இப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள், அடிக்கடி வந்து தொட்டியில் உள்ள தண்ணீரை அருந்தி செல்கின்றன.
பொதுமக்கள் கூறுகையில், 'காட்டு யானைகள் துாய்மையான தண்ணீரை மட்டுமே பருகும் பண்புடையது. இதனால் அடிக்கடி தொட்டியை சுத்தம் செய்து, தூய்மையான தண்ணீரை நிரப்பி வைக்கிறோம்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டு யானைகள், தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்து மகிழ்கின்றன' என்றனர்.

