/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாய்க்காலில் கவிழ்ந்த கார் பாதுகாப்பு வழங்காதது ஏன்?
/
வாய்க்காலில் கவிழ்ந்த கார் பாதுகாப்பு வழங்காதது ஏன்?
வாய்க்காலில் கவிழ்ந்த கார் பாதுகாப்பு வழங்காதது ஏன்?
வாய்க்காலில் கவிழ்ந்த கார் பாதுகாப்பு வழங்காதது ஏன்?
ADDED : ஜூன் 01, 2024 11:44 PM

தொண்டாமுத்தூர்:நம்பியழகன்பாளையத்தில், வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வீரகேரளம் --- தொண்டாமுத்தூர் ரோட்டில், நம்பியழகன்பாளையத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், அகலமான தரைமட்ட பாலம் கட்டும் பணி, நான்கு மாதங்களாக நடந்து வருகிறது.
ஒருபுறம் பாலம் கட்டும் பணி நிறைவடைந்ததால், அவ்வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அதன் அருகிலேயே மற்றொரு பாலமும் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான தூண்கள் அமைக்க, வாய்க்காலில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் இடம் என்பதை, எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கவில்லை. பாதுகாப்பு வசதிகளும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் விராலியூரிலிருந்து, வெங்கடாபுரத்துக்கு, தனது குழந்தைகளுடன் காரில் பயணித்த, தினேஷ் என்பவரின் கார், வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. யாருக்கும் காயமில்லை. சாலையின் வளைவில், பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால், அங்கு போதுமான மின் விளக்கு வெளிச்சம் ஏற்படுத்தவும், தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

