/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தே.மு.தி.க., ஆண்டுவிழாவில் விஜயபிரபாகர் பங்கேற்பு
/
தே.மு.தி.க., ஆண்டுவிழாவில் விஜயபிரபாகர் பங்கேற்பு
ADDED : செப் 15, 2024 11:59 PM
கோவை : கோவையில் நடந்த தே.மு.தி.க., ஆண்டுவிழாவில், விஜய பிரபாகர் பங்கேற்றார்.
தே.மு.தி.க., தலைவர் மறைந்த விஜயகாந்தின், 72 வது பிறந்த தினவிழா, கட்சியின், 22 ம் ஆண்டு துவக்கவிழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, சிங்காநல்லுார் அரவான் கோவில் திடலில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார்.
அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர். தொடர்ந்து அவர் பேசுகையில், 'கட்சியை ராணுவ கட்டுப்பாட்டுடன் எனது தந்தை வழிநடத்தினார். கட்சி ஆரம்பிக்கும் போது, நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அப்போது, கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று என்னிடமும் ஆலோசனை கேட்டார். நான்கைந்து பெயரில், தேசிய சிந்தனையுடன் முற்போக்கு பார்வையுடன், திராவிடம் கலந்து கட்சியை வழி நடத்த, தே.மு.தி.க., என்ற பெயரை தேர்வு செய்தார். இவ்வாறு விஜயபிரபாகர் பேசினார்.
அதை தொடர்ந்து, மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம், சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், 100 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன.

