/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் விரைவில் தீர்ப்பு
/
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் விரைவில் தீர்ப்பு
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் விரைவில் தீர்ப்பு
கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் விரைவில் தீர்ப்பு
ADDED : ஏப் 24, 2024 09:18 PM
கோவை:பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், இன்னும் இரண்டு மாதங்களில் தீர்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில், திருநாவுக்கரசு, 28, சபரிராஜன், 25, சதீஷ், 31, வசந்தகுமார், 31, மணிவண்ணன், 32, ஹெரன்பால், 33, பாபு, 27, அருளானந்தம், 37, மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஐந்து ஆண்டுகளாக சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது, 2019, மே 21ல் கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கடந்தாண்டு, பிப்., 24 முதல் சாட்சி விசாரணை நடந்து வருகிறது.
அரசு தரப்பு சாட்சி மற்றும் எதிர் தரப்பு சாட்சிகளிடம், விசாரணை நிறைவடைந்தது. வழக்கை புலன் விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி., மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் சாட்சியம் பெறுவதற்காக, வழக்கு மே 2 மற்றும் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூனில் அனைத்து விசாரணையும் முடிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

