/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்பகம் தொழில்நுட்ப கல்லுாரியில் 'வர்ணம் -2024'
/
கற்பகம் தொழில்நுட்ப கல்லுாரியில் 'வர்ணம் -2024'
ADDED : மார் 26, 2024 11:50 PM

கோவை;கற்பகம் தொழில்நுட்பக் கல்லுாரியில், வர்ணம் - 2024 படைப்பாற்றல், அறிவுத்திறன் நிகழ்ச்சி நடந்தது.
கடந்த 21 முதல், 23 வரை நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள், இதில் பங்கேற்றனர். பின்னணிப்பாடகர்கள், பிரசன்னா, பூஜா ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவர்கள், தொழில்நுட்ப கருத்தரங்குகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கேற்ற, மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்ச்சியை துவக்கி வைத்து, கல்லுாரி முதல்வர் மணிமாறன் பேசுகையில், ''வர்ணம்-2024 திறமை, படைப்பாற்றல், ஒற்றுமையின் கொண்டாட்டமாக உள்ளது. மாணவர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு, ஆர்வம், அளப்பறியது. அவர்களின் உற்சாகம், கல்லுாரி மீதான உணர்வை உயர்த்தியுள்ளது,'' என்றார்.

