/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வானதி சீனிவாசன் கோரிக்கை; முன்னாள் எம்.பி., கண்டனம்
/
வானதி சீனிவாசன் கோரிக்கை; முன்னாள் எம்.பி., கண்டனம்
வானதி சீனிவாசன் கோரிக்கை; முன்னாள் எம்.பி., கண்டனம்
வானதி சீனிவாசன் கோரிக்கை; முன்னாள் எம்.பி., கண்டனம்
ADDED : ஆக 20, 2024 10:25 PM
கோவை;கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை எவ்வித நிபந்தனையுமின்றி, விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனின் கோரிக்கைக்கு, முன்னாள் எம்.பி., நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சர்வதேச விமானங்கள் கூடுதலாக வந்து செல்லும் வகையில், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு ரூ. 2,100 கோடி செலவு செய்து நிலங்களை கையகப்படுத்தி உள்ளது. விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு, நிலங்களை விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்க நிபந்தனை விதித்துள்ளது. மாநில அரசால் ஒப்படைக்கும் நிலங்களைக் கொண்டு விரிவாக்கம் செய்யப்படும் போது, எதிர்காலத்தில் தனியாருக்கு கொடுக்கக் கூடாது என்பதே, அந்த நிபந்தனை.
தற்போது பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தமிழக முதல்வரை சந்தித்து, விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை ஒப்படைப்பதில், மாநில அரசு விதித்துள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் சொத்தை, தனியாருக்கு கொடுக்க அனுமதிக்க முடியாது. இந்த விஷயத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,வின் கோரிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு, இதற்கு அனுமதிக்க கூடாது.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

