/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி
/
கேரளாவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசி
ADDED : மே 27, 2024 01:44 AM
போத்தனூர்;க.க.சாவடி அடுத்து, வேலந்தாவளம் சாலையில் வழுக்கல் சோதனை சாவடி அருகே, பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே கேரளாவுக்கு செல்ல வந்த, லாரியை சோதனையிட்டனர். இரண்டாயிரத்து, 100 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. லாரியுடன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், வேலந்தாவளத்தை சேர்ந்த டிரைவர் ராஜன், 28, ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த சுதாகர் உதவியுடன் செட்டிபாளையம், பாப்பம்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கியுள்ளார்.
இதனை வேலந்தாவளத்தை சேர்ந்த மற்றொரு ராஜனுக்கு, விற்பனை செய்ய கடத்திச்சென்றது தெரிந்தது. ராஜனை கைது செய்த போலீrசார், மற்றுமொரு ராஜன், சுதாகர் ஆகியோரை தேடுகின்றனர்.

