/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்ணீர் தொட்டியில் விழுந்து இரு கட்டட தொழிலாளர் பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்து இரு கட்டட தொழிலாளர் பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து இரு கட்டட தொழிலாளர் பலி
தண்ணீர் தொட்டியில் விழுந்து இரு கட்டட தொழிலாளர் பலி
ADDED : ஜூன் 01, 2024 12:28 AM
கோவை;உடையாம்பாளையம் பகுதியில் கட்டுமான பணியின் போது, தண்ணீர் தொட்டியில் விழுந்து, இரு தொழிலாளிகள் உயிரிழந்தனர்.
சின்னவேடம்பட்டி ரோடு, உடையாம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார். இவர் உடையாம்பாளையம் பகுதியில் வீடு, கடைக்கான கட்டடம் கட்டி வருகிறார். கட்டடம் கட்டும் 'கான்டிராக்டை', தருமபுரியை சேர்ந்த குமார், 27 என்பவர் எடுத்துள்ளார்.
புதிதாக கட்டி வரும் கட்டடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில், சென்டிரிங் பிரிக்க ஒடிசாவை சேர்ந்த மனோஜ், 27 கீழே இறங்கிய போது, மயங்கி விழுந்துள்ளார்.
இதைப்பார்த்து கான்ட்ராக்டர் குமார், மனோஜை துாக்க முயன்ற போது அவரும் விழுந்துள்ளார். 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருவரையும் மீட்டு பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

