/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.என்.பி.எல்., போட்டிகள் கோவையில் இன்று துவக்கம்
/
டி.என்.பி.எல்., போட்டிகள் கோவையில் இன்று துவக்கம்
ADDED : ஜூலை 12, 2024 10:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் கோவையில் இன்று முதல் நடக்கிறது.
இந்தாண்டுக்கான, டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் ஜூலை, 5ம் தேதி முதல் ஆக., 4ம் தேதி வரை நடக்கிறது. சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கிறது.
முதல் கட்டமாக, தொடரின் முதல் ஒன்பது போட்டிகள் சேலத்தில் நடந்தன. தற்போது, இன்று முதல், இரண்டாம் கட்ட லீக் போட்டிகள் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடக்கிறது. இன்று துவங்கி ஜூலை 18ம் தேதி வரை கோவையில் எட்டு போட்டிகள் நடக்கவுள்ளன.

