/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யுகாதியை முன்னிட்டு வரும் 9ல் திருக்கல்யாணம்
/
யுகாதியை முன்னிட்டு வரும் 9ல் திருக்கல்யாணம்
ADDED : ஏப் 05, 2024 10:44 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி மண்டல கம்மவார் சங்க ஸ்ரீரேணுகாதேவி டிரஸ்ட், தமிழ்நாடு கம்மநாயுடு மகாஜன சங்கம், பொள்ளாச்சி மண்டலம் சார்பில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ரேணுகாதேவி திருக்கல்யாண உற்சவம், பொள்ளாச்சி நல்லப்பா மஹாலில் நடக்கிறது.
வரும், 8ம் தேதி காலை, 6:30 மணி முதல், 7:30 மணிக்குள் கணபதி ேஹாமம், தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு ரங்கா யாத்ரா குழுவினருடன் இணைந்து ஹரி பஜனை குழுவினரின் நாம கீர்த்தனம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு வஞ்சியாபுரம் பிரிவு மாக்கினாம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள லட்சுமி நகர் புற்றுக்கண் பகுதியில் புற்று பூஜை, தீபாராதனை நடக்கிறது. வரும், 9ம் தேதி காலை, 8:00 மணிக்கு ஜமத்கனி ரேணுகாதேவியின் திருக்கல்யாண வைபவ உபன்யாசம், ஆன்மிக உபன்யாசகர் தேவராஜ் குழுவினர் சார்பில் நடக்கிறது.
காலை, 9:00 மணிக்கு பட்டிமன்ற நடுவர் தனமணி வெங்கட்டின் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. காலை, 10:30 -- 12:00 மணிக்குள் ரேணுகாதேவி திருக்கல்யாண உற்சவம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

