/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் இல்லை: கோவையில் தமிழிசை பேட்டி
/
தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் இல்லை: கோவையில் தமிழிசை பேட்டி
தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் இல்லை: கோவையில் தமிழிசை பேட்டி
தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் இல்லை: கோவையில் தமிழிசை பேட்டி
ADDED : ஆக 25, 2024 01:26 AM
கோவை;தமிழகத்தில் ஆன்மிகமின்றி அரசியல் நடத்த முடியாது என்பதை, பழநி முத்தமிழ் முருகர் மாநாடு உணர்த்துகிறது, என, தமிழத்தின் பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில், தமிழிசை அளித்த பேட்டி:
தமிழ்நாடு ஆன்மிக பூமிதான். சனாதன தர்மத்தை எதிர்த்து பேசினாலும், ஆன்மிகம் பேசினாலும் அரசியல் செய்ய முடியாது என்பதை, முத்தமிழ் முருகன் மாநாடு உணர்த்துகிறது. ஓட்டுக்காக எதை வேண்டுமானாலும் செய்வோம் என்ற யுக்தியை செய்துள்ளனர்.
சிறுபான்மையினர் மாநாடு இது போன்று நடந்தால், முதல்வர் சென்று துவக்கி வைப்பாரா, மாட்டாரா என்பதுதான் கேள்வி.
அண்ணாதுரையின் தமிழை பின்பற்றியவர்கள், ஆண்டாளின் தமிழையும் பின்பற்றும் நிலை வரும்.
எங்களுக்கு தி.மு.க.,வுடன் இணக்கமான சூழ்நிலை என்பதைவிட, பிணக்கமான சூழ்நிலை தான் உள்ளது. எங்களது கொள்கை வேறு. அவர்களது கட்சி தலைவரின் நாணயத்தை வெளியிட அழைத்தாலும், நாகரீகமான அரசியலை முன்னெடுத்து செல்ல, மத்திய அரசு முடிவு செய்தது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இருந்தபோது, கூட்டணி இருந்தது என்றாலும், தற்போது தி.மு.க.,வுடன் கூட்டணி என்பதெல்லாம், நாணய விழாவோடு போய் விட்டது. அ.தி.மு. க.,வுடன் கூட்டணியால், எங்களது ஓட்டு வங்கி இருப்பதை, செயலால் நிரூபித்துள்ளோம்.
நிலைமை மாறி விட்டது
முருகனை எதிர்த்தவர்கள் மாநாடு நடத்த வேண்டியுள்ளது. 'ஒன்றிய அரசு' என்றவர்கள், 'மத்திய அரசு' என சொல்ல வேண்டிய நிலை வந்தது. தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டுள்ளனர். முருகனை பிடிக்காவிட்டால், 2026 மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி விடும் என நினைக்கிறார்கள். முருகன் மாநாடு நடத்துகின்றனர்.
பள்ளி கல்வித்துறை, கற்பித்தலோடு மாணவிகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். பாலியல் சீண்டல்கள் மிகவும் கவனமாக கவனிக்கப்பட வேண்டும்.
மருத்துவ கல்வியில் பாதுகாப்பு இருக்க வேண்டும். தமிழகத்தில் எந்த குற்றம் நடந்தாலும், சில பேர் காப்பாற்றப்பட, குற்றவாளிகள் பலியாகி விடுகின்றனர். எலிமருந்து சாப்பிட்டு விடுகிறார்கள்; விபத்தில் பலியாகின்றனர்.
இந்த விவகாரத்தில், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நாகரீகம் என்ற வகையில் கலாசாரம் சீர்குலைந்துள்ளது. பிரச்னைகளுக்கு காரணமே இதுதான்.
இவ்வாறு, தமிழிசை தெரிவித்தார்.

