/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு
/
கோடையை குஷியாக்க... கோர்ஸ் நிறைய இருக்கு
ADDED : ஏப் 14, 2024 10:49 PM
கோடை விடுமுறை துவங்கவுள்ளது. லீவ் என்றாலே பெரும்பாலான குழந்தைகளின் கைகளை மொபைல் போன்கள்தான் ஆக்கிரமித்திருக்கும். மொபைலில் அதிக நேரம் செலவிடும் பழக்கத்தால் சிறுவர்களுக்கு நினைவாற்றல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அவற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க, கோடை விடுமுறை பயிற்சி வகுப்புகள் சிறந்த சாய்ஸ். இது அவர்களை மகிழ்ச்சியாகவும், அதே நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையிலும் வைத்துக் கொள்ளும். கூடவே, விடுமுறை முடியும்போது, ஒரு புதிய திறன் கற்றுக்கொண்ட திருப்தியும் ஏற்படும்.
மிஸ்டர் பீம் பிட்னஸ் அண்ட் யோகா சென்டர்
கிட்ஸ் யோகா, கராத்தே, சிலம்பம், கலரிங், போர்ட்ரேட் டிராயிங், டான்ஸ், கேம்ஸ் அண்டு ஆக்டிவிட்டிஸ் ஆகியன கற்றுத் தரப்படுகின்றன. கட்டணம்: ரூ.2,000. முகவரி: செட்டிபாளையம் சாலை, போத்தனூர். தொடர்புக்கு: 80722- 09276, 86082- 04334.
ஸ்கூல் பார் பர்பெக்ட் விஷன்
கண்களுக்கு பயிற்சி அளிப்பது எப்படி, மொபைல்போனில் அதிக நேரம் செலவிடும் வழக்கத்தில் இருந்து மீள்வது எப்படி என்பது பற்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. 7 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். முகவரி: சாயிபாபா காலனி. தொடர்புக்கு: 70943- 33000, 70945- 75757.
பாலாஜி தட்டச்சு பயிலகம்
8ம் வகுப்பு மாணவர்கள் முதல், அனைத்து தரப்பினருக்கும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு பயிற்சி, சி.ஓ.ஏ., கணினி வழி பயிற்சி அளிக்கப்படுகிறது. முகவரி: நரசிம்மநாயக்கன்பாளையம். தொடர்புக்கு: 96981 -72438, 77089- 70034.
வர்ணம் பைன் ஆர்ட் அகாடமி
பேப்பர் கிராப்ட், ஜியோமெட்ரிக் சேப்ஸ், ஆயில் பேஸ்டல் டிராயிங், ப்ரீ ஹேண்ட் டிராயிங், பேசிக் லைன்ஸ் அண்ட் சேப்ஸ், கலர் பென்சில் டிராயிங், வாட்டர் கலர் பெயின்டிங் ஆகிய பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. கட்டணம்: ரூ.500 - 800. முகவரி: குனியமுத்தூர். தொடர்புக்கு: 81109- 96199.
கோடைகால இசைப்பயிற்சி முகாம்
கீபோர்டு, கிடார், டிரம்ஸ், வோக்கல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. யு.கே.ஜி., முதல் 15 வயதுடைய மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம். முகவரி: என்.ஜி.பி.,பள்ளி, காளப்பட்டி. தொடர்புக்கு: 94428- 52222, 94446- 23287.
தமிழ்நாடு பாரம்பரிய தற்காப்பு கலைக்கூடம்
கராத்தே, சிலம்பம், பாக்ஸிங், கிக் பாக்ஸிங், எடை குறைப்பு, எடை அதிகரிப்பு, தற்காப்பு கலை ஆகியவை கற்றுத் தரப்படுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். முகவரி: சுந்தராபுரம். தொடர்புக்கு: 99524- 00314.
வாலிபால் பயிற்சி முகாம்
டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் நினைவு ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கோவை மாவட்ட வாலிபால் சங்கம் சார்பில் ஏப்., 24ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை, நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாநகராட்சி வாலிபால் மைதானத்தில் பயிற்சி முகாம் நடக்கிறது. தொடர்புக்கு: 94981 71207, 82483 03061.
புட்லுாஸ் டான்ஸ் ஸ்டுடியோ
நடனம் கற்றுக்கொள்ள விரும்பும் 4 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, ஆர்.எஸ்.புரம் கிழக்கு டி.வி.சாமி சாலையில் உள்ள புட்லுாஸ் டான்ஸ் ஸ்டுடியோவில், 15 நாட்கள் கோடைக்கால பயிற்சி முகாம் நடக்கிறது. ஒரு நாள் 'பிரீ டிரையல்' வசதியும் உள்ளது. தொடர்புக்கு: 98422 22467.
யூனிக் தடகளப்பயிற்சி முகாம்
நேரு ஸ்டேடியம் மற்றும் ஜி.என்.மில்ஸ் பகுதிகளில் சிறுவர்களுக்கு நாளை முதல் தடகளப்பயிற்சி முகாம் நடக்கிறது. காலை 6:00 முதல் 7:30 மணி, மாலை 4:30 முதல் 6:00 மணி வரை என, இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தொடர்புக்கு: 97900 62048, 86670 62857.
எஸ்.கே.கிரிக்கெட் அகாடமி
குனியமுத்துார் எஸ்.கே.கிரிக்கெட் அகாடமி சார்பில், ஒரு மாத கால கோடை கிரிக்கெட் பயிற்சி முகாம் நடக்கிறது. காலை, மாலை என இரு பிரிவுகளாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தொடர்புக்கு: 73737 93434.
ஆன்லைன் யோகா
சுகி ஸ்பிரிட்ஸ் சார்பில், கோடைக்கால சிறப்பு ஆன்லைன் யோகா மற்றும் தியானப்பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் காலை, 6:30 முதல் 7:30 வரை குழந்தைகளுக்கும், காலை 5 முதல் 6 மணி, மாலை, 6:30 முதல் 7:30 வரை பெண்களுக்கும், யோகா வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. விவரங்களுக்கு, 76673 33074.
கோடை விடுமுறையில், இது போன்ற இலவச/ கட்டண பயிற்சி வகுப்புகள் நடத்துவோர், 98940 09282 என்ற எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் வாயிலாக அனுப்பலாம். இலவசமாக பிரசுரிக்கப்படும்.

