/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சுட்டெரிக்குது உதய சூரியன் நிழல் தருது ரெட்டை இலை'
/
'சுட்டெரிக்குது உதய சூரியன் நிழல் தருது ரெட்டை இலை'
'சுட்டெரிக்குது உதய சூரியன் நிழல் தருது ரெட்டை இலை'
'சுட்டெரிக்குது உதய சூரியன் நிழல் தருது ரெட்டை இலை'
ADDED : ஏப் 10, 2024 12:24 AM

'பாட்டிமா... உங்க பேரன் வந்துகொண்டிருக்கிறாரு. மறக்காம ரெட்டை இலைக்கு ஓட்டு போட்டிடுங்க. ஒர்க் ஷாப் வச்சிருக்கும் பச்சை சட்டைக்கார அண்ணே, பார்த்து மின்சாரத்தை பயன்படுத்துங்க. இந்த தி.மு.க.,காரங்க இஷ்டத்துக்கு கட்டணத்தை ஏத்தி வச்சிருக்காங்க. வீட்டு மாடியில நிற்கும் அக்கா ரெட்டை விரலை துாக்கி காட்டி ஆதரவு தெரிவியுங்க. மஞ்ச சட்டை போட்டிருக்கும் அண்ணே மறக்காம ரெட்டை இலைக்கு 'பட்டன்' அழுத்துங்க' என்ற பிரசாரம், அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.
அ.தி.மு.க., வேட்பாளருக்காக டூவீலரில் அமர்ந்தவாறு மைக்கை பிடித்துக்கொண்டு கொங்கு தமிழில் பிரசாரம் செய்து வரும் சின்னச்சாமியின் மொழி நடை வாக்காளர்களை கவர்ந்துவருகிறது. கோவை லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராமச்சந்திரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக இருசக்கர வாகனம் ஒன்றில் பின்புறம் அமர்ந்து கொண்டு கோவையை சேர்ந்த சின்னச்சாமி 'ஒயர்லெஸ் மைக்'கைபிடித்துகொண்டுகொங்கு தமிழில் ஓட்டு சேகரித்தார்.
'கடுமையா சுட்டெரிக்கும் உதய சூரியன் சின்னமுடைய தி.மு.க.,க்காரங்க இப்போது வரி உயர்வு, மின் கட்டணம் என பல வழிகளில் மக்களை வாட்டி வதைக்கிறாங்க. உங்களுக்கு பாதுகாப்பாக நிழல் தருவதற்கு அ.தி.மு.க.,வின் ரெட்டை இலை வந்திருக்கு' என, எதுகை மோனை வடிவில் அவர் மேற்கொண்டு வரும் பிரசாரம் சிரிப்பலையையும் ஏற்படுத்தி வருகிறது.

