/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வாக்காளர்களுக்கு இதுவரை 10.52 லட்சம் பூத் சிலிப் வினியோகம்! 16ம் தேதிக்குள் 20 லட்சம் வழங்க இலக்கு

ADDED : ஏப் 09, 2024 11:31 PM
கோவை;கோவை மாவட்டத்தில், இதுவரை, 10.52 லட்சம் வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலின்போதும், வீடு தேடிச் சென்று வாக்காளர்களிடம் ஓட்டு கேட்கும்போது, அரசியல் கட்சியினர் கட்சி சின்னம் அச்சிட்ட பூத் சிலிப் வழங்குவது வழக்கம்.
கடந்த சில தேர்தல்களில், தேர்தல் ஆணையம் சார்பிலேயே பூத் சிலிப் வழங்கப்படுகிறது. எந்த பள்ளியில், எந்த கட்டடத்தில் ஓட்டுப்போட வேண்டும் என்கிற முழு விபரம், அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், 31 லட்சத்து, 14 ஆயிரத்து, 118 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்குரிய பூத் சிலிப்கள் அச்சடிக்கப்பட்டு, அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.
அவை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக, வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.
கடந்த 1ம் தேதி இப்பணி துவங்கியது; 8ம் தேதி வரையிலான எட்டு நாட்களில், 10 லட்சத்து, 52 ஆயிரத்து, 256 வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 20 லட்சத்து, 61 ஆயிரத்து, 862 வாக்காளர்களுக்கு வழங்க வேண்டியிருக்கிறது.
இதில், தொண்டாமுத்துார் தொகுதியில் மட்டும் மிக குறைவாக, 63 ஆயிரத்து, 975 வாக்காளர்களுக்கு மட்டுமே, பூத் சிலிப் வழங்கப்பட்டு இருக்கிது. இது, 19 சதவீதமாகும்.
இப்பணியை வேகப்படுத்தி, 16ம் தேதிக்குள் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.