/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை த்ரோபால் அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
/
கோவை த்ரோபால் அணி வீரர், வீராங்கனைகள் தேர்வு
ADDED : ஏப் 26, 2024 01:12 AM

கோவை;மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் கோவை மாவட்ட த்ரோபால் அணிக்காக வீரர் - வீராங்கனையினர் தேர்வு வரதராஜபுரம் டி.என்.ஜி.ஆர்., பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது.
தமிழ்நாடு த்ரோபால் சங்கம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவியருக்கான 22வது மாநில ஜூனியர் த்ரோபால் போட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் மே, 3ம் தேதி முதல் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் கோவை மாவட்ட அணிக்கான தேர்வு 'த்ரோபால் அசோசியேஷன் ஆப் கோயம்புத்துார் டிஸ்ட்ரிக்ட்' சார்பில் நேற்று மாணவ - மாணவியருக்கு தனித்தனியாக நடந்தது.
இதன் மாணவர் பிரிவில் 50க்கும் மேற்பட்டோர், மாணவியர் பிரிவில் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு சுற்றுக்களாக நடத்தப்பட்ட இத்தேர்வின் முடிவில் மாணவர்கள் பிரிவில் சிறந்த 14 வீரர்களும், மாணவியர் பிரிவில் சிறந்த 14 வீராங்கனையினரும் தேர்வு செய்யப்பட்டனர்.

