/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோர்வடைந்த நிலையில் 6 வயது சிறுத்தை மீட்பு
/
சோர்வடைந்த நிலையில் 6 வயது சிறுத்தை மீட்பு
ADDED : ஜூன் 10, 2024 11:55 PM
பாலக்காடு;கேரள மாநிலம், அட்டப்பாடியில் சோர்வடைந்த நிலையில் இருந்த சிறுத்தை மீட்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே அட்டப்பாடி வன எல்லை பகுதியில், கோட்டத்தறை புளியப்பதி என்ற இடத்தில் உள்ள வயலில் காயம்பட்டு சோர்வடைந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
தகவல் அறிந்து, அகளி சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வலை போட்டு சிறுத்தையை பிடித்து கூண்டில் எடுத்து சென்று, சைலண்ட்வேலியில் சிறப்பு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'ஆறு வயதுள்ள ஆண் சிறுத்தை சோர்வடைந்த நிலையில் உள்ளது. மற்ற வன விலங்குகளுடன் ஏற்பட்ட மோதலால், சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது,' என்றனர்.

