தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை


ADDED : ஜூலை 03, 2024 09:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2024 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியர் நிற்குமிடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளியூர், டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வருகின்றனர்.

அங்கு திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியர் காத்திருப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சிறிய தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.

அங்குள்ள கடைகளும் ஆக்கிரமிக்கின்றன. இதனால், பயணியர் அந்த இடத்தில் அமர முடியாமல் நின்று கொண்டு அவதிப்பட வேண்டியதுள்ளது.

எனவே, பயணியருக்கு இடையூறாக போடப்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us