/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல்போன் டவரை அகற்றுங்க! பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் மனு
/
மொபைல்போன் டவரை அகற்றுங்க! பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் மனு
மொபைல்போன் டவரை அகற்றுங்க! பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் மனு
மொபைல்போன் டவரை அகற்றுங்க! பொதுமக்கள் சப்-கலெக்டரிடம் மனு
ADDED : செப் 04, 2024 11:20 PM

பொள்ளாச்சி : 'குள்ளக்காபாளையத்தில், மொபைல்போன் டவர் வாயிலாக வெளிப்படும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படுவதால், அதை அகற்ற வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்தனர்.
பொள்ளாச்சி குள்ளக்காபாளையம் பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நெசவு மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த, 2009ம் ஆண்டு தனியாருக்கு சொந்தமான இடத்தில், மொபைல்போன் டவர் அமைக்கப்பட்டது. அப்போது, ஒரு நெட்வொர்க் அலைவரிசை மட்டும் பயன்படுத்தப்பட்டது. தற்போது, பல்வேறு தொலைதொடர்பு நிறுவனங்களின் அலைவரிசையும் சேர்க்கப்பட்டது. இதனால், கதிர்வீச்சு அதிகமாகி வருவதால், இங்கு வசிப்போர் பல்வேறு விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர்.
இரவு நேரங்களில் கதிர்வீச்சின் ஒலி அளவு அதிகரித்து, நிம்மதியாக துாங்கமுடியாத சூழல் உள்ளது. பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தி வரும் மொபைல்போன் டவரை அகற்ற வேண்டுமென, கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த, 2022ம் ஆண்டு சப் - கலெக்டர், தாசில்தார், வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோருக்கு பதிவு தபாலில் புகார் மனு அனுப்பப்பட்டது. இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஒப்பந்த காலமான, 15 ஆண்டுகள் முடிவு பெறும் சூழலில், மொபைல்போன் டவரை அகற்ற வேண்டும். புதிதாக டவர் அமைக்க அனுமதி அளிக்க கூடாது.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

