/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வ.உ.சி., பூங்காவில் இருந்த புள்ளிமான்களுக்கு விடுதலை
/
வ.உ.சி., பூங்காவில் இருந்த புள்ளிமான்களுக்கு விடுதலை
வ.உ.சி., பூங்காவில் இருந்த புள்ளிமான்களுக்கு விடுதலை
வ.உ.சி., பூங்காவில் இருந்த புள்ளிமான்களுக்கு விடுதலை
ADDED : மே 14, 2024 01:34 AM

கோவை;கோவை வ.உ.சி., பூங்காவில் இருந்த, 26 புள்ளிமான்கள் அடர் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டன.
கோவை வ.உ.சி., உயிரியல் பூங்காவின் அங்கீகாரம், 2022ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. தலைமை வன உயிரின காப்பாளர், பூங்கா உயிரினங்களை இடமாற்ற, கடந்தாண்டு அனுமதி அளித்தார்.
இதையடுத்து ஒவ்வொரு விலங்காக வனப்பகுதிகளுக்குள் விடுவிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, வ.உ.சி., பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த புள்ளி மான்களுக்கு, வழங்கப்பட்டு வந்த அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு, கூடுதலாக பச்சைத் தீவனங்கள், சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகள் அளிக்கப்பட்டன.
இந்த உணவுக்கு அவை பழகியதையடுத்து, நேற்று காலை, 26 புள்ளி மான்கள் சிறுவாணி மலை அடிவாரம், பில்டர் ஹவுஸ் சரகம் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.
விடுவிக்கப்பட்ட புள்ளி மான்கள் தீவனம் உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ளது.

