/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் கேமரா வையுங்க!
/
தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் கேமரா வையுங்க!
ADDED : மார் 31, 2024 08:58 PM
கிணத்துக்கடவு:பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், விபத்தை கண்டறிய கூடுதல் கண்காணிப்பு கேமரா நிறுவ வேண்டுமென, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில், நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால், 'யூ டர்ன்' பகுதியில் திரும்பும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன. இதனால் சில நேரங்களில், விபத்துகளில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
இதில், சில கனரக வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி விட்டு, அச்சத்தில் வேகமாக சென்று விடுகின்றன. இவற்றை கண்காணிக்க, நகரின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கவனிக்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையில், கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடத்தில் விபத்து நடந்தால் குற்றவாளிகளை கண்டறிய காலதாமதம் ஏற்படுகிறது. போலீசாருக்கும், குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் காலஅவகாசம் தேவைப்படுகிறது.
எனவே, மேம்பாலத்தின் மேல் பகுதி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

