/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேரளா வேர் வாடல் நோய் பாதித்த மரங்களுக்கு நிவாரணம் வழங்கல்
/
கேரளா வேர் வாடல் நோய் பாதித்த மரங்களுக்கு நிவாரணம் வழங்கல்
கேரளா வேர் வாடல் நோய் பாதித்த மரங்களுக்கு நிவாரணம் வழங்கல்
கேரளா வேர் வாடல் நோய் பாதித்த மரங்களுக்கு நிவாரணம் வழங்கல்
ADDED : மே 17, 2024 11:25 PM

பொள்ளாச்சி;'ஆனைமலை பகுதியில், கேரளா வேர் வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது,' என, தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஆனைமலை பகுதிகளில் கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கேரளா வேர் வாடல் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின், பொள்ளாச்சி பகுதியில் வேர் வாடல் நோய் பாதித்த மரங்களை வெட்டி அகற்றுவதற்காக, 14 கோடியே, நான்கு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.
மேலும், மூன்று லட்சம் தென்னங்கன்றுகள், 2 கோடியே, 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உழவர்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி, வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட மரங்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்கும் பணியில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
கேரளா வேர் வாடல் நோய் தீவிரமாக பாதிக்கப்பட்ட மரங்களை வெட்ட, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஒரு விவசாயிக்கு, ஒரு ெஹக்டேருக்கு, 32 மரங்களுக்கு தலா, ஆயிரம் ரூபாய் என மொத்தம், 32 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
மேலும், தென்னை நாற்றுகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. நோய் தாக்கப்படாத மரங்களை காப்பாற்ற ஊட்டச்சத்துகள், டானிக், நுண்ணுயிர் உரங்கள் வழங்கப்படுகிறது. இதுவரை, 900 ெஹக்டேருக்கு, 1,200 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

