/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரசார கார்... முன்னே நீர் மோர்... பின்னே!
/
பிரசார கார்... முன்னே நீர் மோர்... பின்னே!
ADDED : ஏப் 09, 2024 11:21 PM
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரசாரத்தில், தனி வேனில் தண்ணீர், நீர்மோர் கொண்டு வரப்பட்டது.
லோக்சபா தேர்தல் ஓட்டு சேகரிப்பில், அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். தொண்டாமுத்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி பிரசாரம் செய்தார். பிரசார வாகனத்தோடு, பத்துக்கும் மேற்பட்ட கார்களில், கட்சி நிர்வாகிகள் வந்தனர்.
தற்போது வெயில் வாட்டி வதைத்து வருவதால், பிரசார வாகனத்தின் பின்னால், தனியார் கேட்டரிங் சர்வீஸ் வேனில், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நீர் மோர் கொண்டு வரப்பட்டன. பிரசாரம் மேற்கொண்ட அனைத்து பகுதிகளுக்கும், இந்த வேன் பின் தொடர்ந்தது. அதில் இருந்தவர்கள் கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் தண்ணீர் மற்றும் நீர்மோர் வழங்கி, கூல் ஆக்கினர்.

